MARC காட்சி

Back
தஞ்சாவூர்
000 : nam a22 7a 4500
008 : 220825b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a தஞ்சாவூர்
300 : _ _ |a சுவரோவியங்கள்
500 : _ _ |a

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விமானத்தின் உட்புறத்தில் கருவறை திருச்சுற்றுப் பாதையில் உள்ள சுவர்ப் பகுதியில் இரு புறங்களிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் ஓவியங்கள் காணப்படுகின்றது. தற்போது ஒன்பது சுவர்ப் பகுதிகளில் இக் கால ஓவியங்களைக் காணலாம். இக் கோயிலில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் நடந்த திருப்பணியின் போது சோழர் கால ஓவியங்கள் மீது சுதை பூசி பின்னர் நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த நாயக்கர் கால ஓவியங்களின் அடியில் சோழர் கால ஒவியங்கள் இருந்ததை சிதம்பரம், அண்ணாமலை பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். எஸ். கே. கோவிந்தசாமி என்பவர் 1931 ஆம் ஆண்டு கண்டறிந்து உலகிற்கு மீண்டும் அறிமுகம் செய்தார். பின்னர் 1935 ஆம் ஆண்டு எஸ். பரமசிவன் வாசலுக்கு இடது பக்கச் சுவற்றில் வரையப்பட்ட ஓவியத்தில் விஜயராகவ நாயக்கர் என தெலுங்கில் எழுதியிருப்பதைக் கண்டறிந்து அவை 1633 – 1673 வரை தஞ்சையை ஆண்ட நாயக்கர் காலத்தைச் சார்ந்த ஓவியமாக இருக்கக்கூடும் என கூறினார். மேலும் இவ்வோவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணங்களை முறையாக ஆய்வு செய்து வரைவு நுணுக்கங்களை கண்டறிந்து, அவை சுண்ணாம்பு பூச்சு உலரும் முன் வரையக் கூடிய முறையில் ( Freso ) வரையப்பட்டதென அறிவித்தார். இங்குள்ள ஓவியங்கள் 15 சுவர் பகுதிகளில் தீட்டப்பட்டிருந்தன. இவ்வோவிய தொகுதிகள் ஒவ்வொன்றும் 3 மீட்டர் நீளமும், 4.5 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. இதில் 5, 7, 9, 11 ம் சுவர் பகுதிகளில் சோழர் கால ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு சிவ பெருமான் தொடர்பான ஓவியங்கள் மட்டுமன்றி நாயன்மார்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் விளக்கமாக காணப்படுகின்றது.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
520 : _ _ |a

உலகெங்கும் சுவரோவியம் வரைவதற்கு பெரும்பாலும் இரண்டு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். முதலாவது, உலர்ந்த சுவற்றில் வண்ணம் கொண்டு வரைவது (டெம்பரா).இரண்டாவது ஈரச்சுவரில் வண்ணம் கொண்டு வரைவது (ஃப்ரெச்கோ) முதலாவது முறையில் உலர்ந்த சுவற்றில் முதல் நிலை கோடுகளால் காட்சிக்கான உருவங்களை முழுவதுமாக வரைந்த பின் வண்ணங்கள் பூசப்படும், இரண்டாவது முறையில் ஈரச் சுவற்றின் மேல் முதல் நிலை கோடுகள் வரையாமல் தூரிகையால் நேரடியாக உருவங்கள் வரையப்படும். இம்முறையில் ஒரு பெரிய ஓவியத் தொகுதியை முழுமையாக ஒரே சமயத்தில் வரைய இயலாது. ஒரு ஓவியன் ஒரு நாளில் எவ்வளவு பகுதிகள் வரைய முடியுமோ அந்த அளவுக்கு சுவற்றை ஈரப்படுத்தி அந்த அளவுகளில் மட்டும் வரைவார்கள். சுவரின் ஈரத்தன்மை உலர்வதற்குள் வரைய வேண்டும். ஏனெனில், அப்போது தான் அந்த ஈரப்பதத்தில் வண்ணங்கள் ஊடுருவி நெடுங்காலம் வண்ணங்களைத் தக்க வைத்துக்கொள்ளும். இதனால் சுவரின் மேற்பகுதியில் உள்ள வண்ணங்கள் மங்கினாலும் சுவற்றுக்குள் இருக்கும் வண்ணங்கள் ஒவியங்களைத் தக்க வைத்துக் கொண்டு புதுப்பொலிவுடன் வெகு நாட்களுக்கு இருக்கும். இம் முறையில் தான் தஞ்சாவூரில் உள்ள சோழர் கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

653 : _ _ |a சோழர், ராஜராஜன், தஞ்சாவூர், சுவரோவியம், சுந்தரர், சேரமான், தடுத்தாட்கொண்டபுராணம், திரிபுராந்தகர், இராவணன், நடராசர், நாட்டியம், வானவர்கள்
700 : _ _ |a ஓவியர் சந்துரு, ஓவியர் இளஞ்செழியன், திரு. தியாகராஜன்
752 : _ _ |a பெரிய கோயில் |b # |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர்
914 : _ _ |a 10.78295143
915 : _ _ |a 79.13201796
995 : _ _ |a TVA_PNT_00015
barcode : TVA_PNT_00015
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_சுந்தரர்-முதியவர்-0001.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_சுந்தரர்-சேரமான்-0002.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_சிவபெருமான்-பார்வதி-0003.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_பூதகணங்கள்-0004.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_ஆடல்-மகளிர்-0005.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_மனிதன்-யானை-0006.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_அப்சரஸ்-கந்தர்வர்கள்-0007.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_அப்சரஸ்கள்-கந்தர்வர்கள்-0008.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_நடன-மங்கை-0009.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_சுந்தரர்-சேரமான்-நான்முகன்-தும்புரு-0010.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_பண்டிதர்கள்-0011.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_இசை-கலைஞர்கள்-0012.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_ஆடல்வல்லான்-இராஜராஜன்-0013.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_நான்முகன்-0014.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_அரசனும்-ஆசிரியரும்-0015.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_சோழ-படைவீரர்கள்-0016.jpg

TVA_PNT_00015_ பெரிய-கோயில்_திரிபுராந்தகர்-0017.jpg